யாழில் முகாமிட்டது அமெரிக்க இராணுவ வைத்தியர் குழு

13902704_1223176074393317_3349965513533728186_nஅமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவை வௌிப்படுத்தும் முகமாக இன்று அமெரிக்காவின் 40 பேர் கொண்ட விசேட மருத்துவ குழுவினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ளனர்.

பலாலியில் நடைபெற்ற மருத்துவ சேவைக்கான ஆரம்ப நிகழ்வில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவர் இரா.சம்பந்தன், வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்கினேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், அமைச்சர் மனோகணேசன்உ, வட மாகாண அமைச்சர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதற்கட்டமாக கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வலளால் – இடைக்காடு மகா வித்தியாலத்திற்கு சென்று அங்கு நடமாடும் மருத்துவ சேவையினையும் வழங்கினர்.

இதேவேளை இன்னும் 5 நாட்கள் நாட்டில் தங்கியிருக்கும் இந்த அமெரிக்க வைத்தியக் குழுவினர் ஊர்காவற்துறை, வேலனை, நெடுந்தீவு, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கும் இவ் நடமாடும் சேவையினை வழங்கவுள்ளதாகவும், தெரியவந்துள்ளது.13901518_1223255737718684_3480085180502460176_n
13906681_1223255717718686_2342290999022742449_n 13907125_1223215561056035_6064920909696208547_n 13934798_1223255654385359_3058492351902758188_n 14034920_1223221354388789_7751714946160896352_n 14039931_1223176277726630_1411772071770379241_n 14045575_1223255661052025_8409377510141962679_n 14054126_1223221347722123_3924759741732266932_n

இதில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி மற்றும் பாதுகாப்பு படைத் தலைமை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com