யாழில் மீண்டும் வாள்வெட்டு – நான்குபேர் படுகாயம்

யாழ்ப்பாண மாவட்டம் ஈச்சமோட்டைப் பகுதியில் நேற்றிரவு (14) நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் நான்குபேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாண மாநகரசபைக்குட்பட்ட ஈச்சமோட்டைக் குளத்தடிப் பகுதியிலுள்ள வீடோன்றில் புகுந்த குழுவொன்று அங்கிருந்தவர்கள் மீது வாள்வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டபின்னர், குறித்த வீட்டிற்கருகில் இருக்கும் மற்றைய வீட்டிற்குள்ளும் புகுந்து வாள்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இத்தாக்குதலில் யாழ். மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் அவரது மகளும் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவத்தில் படுகாயமடைந்த நான்குபேரும் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com