யாழில் மாணவன் இறந்த விபத்து முன் திட்டமிடப்பட்டதா ? அதிர்ச்சியளிக்கும் சி.சி.ரி.வி வீடியோ !

Vakeesam # accidentயாழ்.காங்சேசன்துறை வீதி வண்ணார்பண்ணை பகுதியில் கடந்த வியாழக்கிழமை (23) இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் யாழ்.மத்திய கல்லூரியில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் உயிரிழந்த நிலையில் அவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் பட்டா டிமோ சாரதிஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள சி.சி.ரி.வி கமராப் பதிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

குறித்த விபத்தில் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் தாவடி காளி கோவிலடியினைச்சேர்ந்த தேவராஜா நிறோஜன் (வயது17) என்னும் மாணவன் சிகிச்சைக்காக யாழ்.போதனாவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  இதன்நிமித்தம் டிமோ பட்டா சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

ஆனால் ஹயஸ் ரக வாகனம் ஒன்று வந்து ஓரிடத்தில் (சி.சி.ரி.வி கரமா பொருத்தப்ட்ட உணவகம் முன்) நிற்பதும் அவ் வாகனத்திலிருந்து ஒருவர் கீழிறங்கி தொலைபேசியை எடுத்துப் பார்த்துவிட்டு அவ்விடத்தில் நிற்பதும் மாணவன் துவிச்சக்கரவண்டியில் வருவதும் குறித்த மாணவன் ஹயஸ் வாகனத்தின் சாரதி இருக்கைக்கு பக்கமாக வரும்போது ஹயஸ் வாகனச் சாரதி தனது கதவினைத் திறப்பதும் அதன்போது மணவனின் துவிச்சக்கரவண்டி கீழே விழ மாணவன் நிலைதடுமாறிய நிலையில் குறித்த வாகனக் கண்ணாடியை எட்டிப்பிடிப்பதும் மேலும் கதவு திறக்கப்பட மாணவன் தூக்கி எறியப்படும்போது பின்னால் வந்த பட்டா டிமோ வாகனத்தில் சிக்கி தூக்கி வீசப்படுவதும் பதிவாகியுள்ளன.

அதன் பின்னர் மக்கள் மாணவனை நோக்கி ஓடும்போது குறித்த ஹயஸ் வாகனத்திலிருந்து ஏற்கனவே இறங்கி நின்றவர் விழுந்து கிடந்த மாணவனைப் பார்த்துவிட்டு தான் வந்த வாகனத் திசைநோக்கிச் செல்வதும் பின்னர் அவர் மாணவனின் (தமது வாகனத்திற்கு அருகில் கிடந்த) துவிச்சக்கரவண்டியை தூக்கிக்கொண்டு  வந்து முன்னால் ஓரிடத்தில் நிறுத்துவதும் காட்சிகளில் பதிவாகியுள்ளன. குறித்த ஹயஸ் வாகனம் பின்னர் அவ்விடத்திலிருந்து நழுவிச்சென்றிருந்தது.

குறித்த வீடியோக் காட்சிகளில் பதிவாயுள்ள ஹயஸ் வாகனத்தினர் நடந்துகொண்ட விதம் அவர்கள் முன் திட்டமிடல் ஒன்றின் அடிப்படையில் மாணவனை விபத்தில் சிக்கவைத்தார்களா என்ற சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்விகற்றுவந்த குறித்த மாணவன் பாடசாலையிலிருந்து இடைவிலக்கப்பட்டிருந்த நிலையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்வியைத் தொடர்வதற்காக இணைந்திருந்தாகவும் ஒரு நாள் மட்டுமே அங்கு கற்ற மாணவன் இணைந்த மறுநாளே விபத்தில் இறந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com