யாழில் போசாக்கை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

tmpF12_thumbயாழ் மாவட்டத்தில் காணப்படுகின்ற போசாக்கு குறைபாடுகளை நிவர்த்தி செய்து போசாக்கை மேம்படுத்துவது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஒன்று யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று(10) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல் தொடர்பில் அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதியின் பணிப்புரையில் நாட்டில் போசாக்கு மட்டத்தை அதிகரித்து போசாக்கற்றவர்களின் சதவிகிதத்தை குறைப்பதை அடிப்படையாக கொண்டு இவ்வேலைத்திட்டம் செயற்படுத்தப்படுகின்றது
சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் இச்செயற்திட்டத்தின்கீழ் யாழ் மாவட்டத்திற்கான போசாக்கு குறைபாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பாக ஆராயும்பொருட்டு இக்கலந்துரையாடல்
இன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகம் மற்றும் சுகாதார அமைச்சிலிருந்து வருகைதந்திருந்த இத்திட்டத்திற்கு பொறுப்பான வளவாளர்கினால் இத்திட்டத்தின் செயன்முறை தொடர்பில் விரிவுரைகள் இதன்போது இடம்பெற்றது என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds