சற்று முன்
Home / செய்திகள் / யாழில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பணி நீக்கம் – 17 பொலிசாருக்கு இடமாற்றம் – கடமை தவறியதாக குற்றச்சாட்டு

யாழில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பணி நீக்கம் – 17 பொலிசாருக்கு இடமாற்றம் – கடமை தவறியதாக குற்றச்சாட்டு

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஒருவர் உட்பட 17 பொலிஸார் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளை விசாரணை செய்யாது அதனை அலட்சியப்படுத்திய குற்றத்திற்காக இவர்கள் உடனடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் ஒரு பொலிஸ் அதிகாரி வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதனடிப்படையில் அனைத்து பொலிஸாருக்கும் எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டுள்ளதுடன் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இதன் மூலம் வேலை நீக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரிலையே இடம் மாற்றம் இன்று (04) வழங்கப்பட்டுள்ளது.

யாழ்.நகர் பகுதியில் உள்ள கடையொன்றில் கடந்த 24 ஆம் திகதி 10 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டன. அது குறித்து மறுநாள் கடை உரிமையாளரால் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

தனது முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் உரிய விசாரணைகளை முன்னெடுக்கவில்லை என வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கடை உரிமையாளர் கொண்டு சென்றார்.

அதனை அடுத்து யாழ்.மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் குழுவொன்றினை அமைத்து, விசாரணைகளை முன்னெடுக்க வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பணித்தார்.

அதன் பிரகாரம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது, கடை உரிமையாளரின் முறைப்பாட்டை அடுத்து அப்போது கடமையில் இருந்த சார்ஜண்ட் தர உத்தியோகஸ்தர் பதிவேட்டு புத்தகத்தில் வெளிச்செல்லும் பதிவு எதனையும் மேற்கொள்ளாது சம்பவ இடத்திற்கு சென்றதுடன், சம்பவ இடத்தில் தன்னால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தனது குறிப்பேட்டில் பதிந்த போதும் அதனை பின்னர் குற்றப்பதிவு புத்தகத்தில் அன்றைய தினமே ஒட்டாது. மறுநாளே ஒட்டியுள்ளார்.

இதுபோன்ற பல்வேறு விடயங்களை விசாரணைக்குழு கண்டறிந்து, வடமாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

அதன் பிரகாரம் பெருங்குற்ற பிரிவில் கடமையாற்றிய அத்தனை உத்தியோகஸ்தர்களுக்கும் இடம் மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை இவ்வாறான சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடைபெற்றதா? என விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com