யாழில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பணம் கொள்ளை

யாழ்ப்பாணத்தில் நேற்று (11) பிற்பகல் பேருந்து ஒன்றில் பயணித்த வயதான பெண் ஒருவரிடமிருந்து ஒரு இலட்சத்து 35 ஆயிரம் ரூபா பணம் களவாடப்பட்டுள்ளது.

இத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் குறித்த நாகேஸ்வரன் வனிதகுமாரி (வயது 59) என்ற பெண் யாழ்ப்பாணம் கச்சேரியிலிருந்து என்.டி. 5864 இலக்க பேருந்தில் ஏராவிலில் உள்ள தனது இல்லத்துக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். வீட்டினை அண்மித்தவர் தனது பணப்பையினைப் பார்த்தபோது அது திறந்து காணப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பையினுள் தேடியபோது அதில் பணம் எதுவும் இருக்கவில்லை. இது தொடர்பில் உடனடியாகவே பேருந்து உரிமையாளர்களுக்கு கூறப்பட்டு பேருந்து முழுவதும் தேடிப் பார்த்ததாகக் கூறப்படுகின்றது.

பேருந்தில் சாரதி ஆசனத்திலிருந்து மூன்றாவது ஆசனத்தில் குறித்த பெண்மணி பயணம் செய்துள்ளார். குறித்த பேருந்தில் அளவுக்கு அதிகமான முறையில் பிரயாணிகள் ஏற்றப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. குறித்த பெண்ணின் இருக்கைக்கு அருகில் நின்றவர்களில் ஒருவர் மக்கள் நெரிசலைப் பயன்படுத்தி பையினைத் திறந்து பணத்தினைக் களவாடியிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.
இசம்பவம் தொடர்பில் பொலிசில் முறையிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com