யாழில் பிரபல தனியார் வைத்தியசாலையில் முறைகேடு! பரிசோதனைக்குச் சென்ற அதிகாரிகள் விரட்டியடிப்பு! பொலிஸில் புகார்! நிர்வாக உத்தியோகத்தர் கைது!

private-hospital-626x380யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அதற்குரிய வசதிகள் அற்ற நிலையில் ஆபத்தான டெங்கு நோயாளி ஒருவர் பராமரிக்கப்பட்டு வருவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து பிராந்திய சுகாதாரப் பணிமனையைச் சார்ந்த தொற்று நோய் தடை வைத்திய அதிகாரி மற்றும் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரிகள் குழுவினர் திடீர் பரிசோதனை ஒன்றை மேற்கொண்டனர்.

இதன் போது 24 வயதுடைய பெண் நோயாளி ஒருவர் ஆபத்தான குருதிப் பெருக்கு டெங்கு நிலையில் பராமக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. அங்கு பயிற்றப்பட்ட தாதியர்கள் அற்ற நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கான உபகரணங்களோ பராமரிப்பு வசதிகளோ காணப்படவில்லை. இதன் போது இதற்கான விளக்கங்களைக் கேட்ட குழுவினரிடம் இருந்த ஆவணங்கள் பலவந்தமாகப் பறிக்கப்பட்டதுடன் இவர்கள் தனியார் வைத்தியசாலை நிர்வாகத்தினரால் வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸில் குறிப்பிட்ட வைத்தியர்களால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தரை உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இன்று (22) கைது செய்தனர்.

கடந்த வருடம் இதே வைத்தியசாலையில் இதே வகையில் தகுந்த சிகிச்சை வசதிகளற்ற முறையில் பராமரிக்கப்பட்ட பாடசாலை மாணவன் உட்பட இரண்டு டெங்கு நோயாளிகள் மரணம் அடைந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com