யாழில் பல்வேறு நிகழ்வுகளில் மீள்குடியேற்ற அமைச்சர்

யாழ்ப்பாணம் வருகைதந்துள்ள சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற புனர்வாழ்வு இந்து விவகார அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் இன்று வெவ்வேறு ஜந்து நிகழ்வுகளில் கலந்துகொண்டார். காலையில் நாவற்குழியில் பனை அபிவிருத்தி சபைக்காகப் புதிதாக அமைக்கப்பட்ட மாநாட்டு மண்டபத்தைத் திறந்துவைத்ததோடு, பனை ஆராய்சி நிலையத்தின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லையும் இன்று நாட்டி வைத்தார். இதேவேளை மானிப்பாய் சந்தைக்கான கட்டடத்தை திறந்து வைத்ததோடு, சுன்னாகத்தில் சந்தைக் கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல்லையும் நாட்டி வைத்தார். மேலும் தெல்லிப்பளை நடேஸ்வராக் கல்லூரிக்காக கட்டடத்தையும், நீர்வேலியில் உருக்குத் தொழிலகத்திற்கான கட்டடங்களையும் இன்று அமைச்சர் திறந்துவைத்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com