யாழில் பல்வேறு இடங்களில் திலீபனின் நினைவுதினம் அனுஷ்டிப்பு

14494813_303179630057080_3554682902589069751_nபதினோரு நாட்கள் நீர்கூட அருந்தாமல் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினராகிய திலீபனின் 29 ஆம் ஆண்டு நினைவு தினம் திங்களன்று யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் அனுட்டிக்கப்பட்டுள்ளது.

 

யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் யாழ்பல்கலைக்கழகத்திலும், தமிழ் மக்கள் முன்னணியினரால் அவர்களது அலுவலகத்திலும், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் விவசாய அமைச்சரினால் திலீபன் உயிர்நீத்த இடத்திலும் அனுஸ்டிக்கப்பட்டன.

இதேவேளை அரசின் ஆதரவு பெற்ற ஜனநாயகப் போராளிகள் மற்றும் தமிழரசுக் கட்சியினர் இணைந்து நல்லூரிலுள்ள திலீபன் நினைவுத்தூபியின் முன்றலில் நினைவு கூர்ந்துள்ளனர்.

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதுடன், தமிழ் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை உடனடியாக நிறுத்த வேண்டும்; வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் பாடசாலைகள், கல்லூரி கட்டிடங்களில் நிலை கொண்டிருந்த காவல்துறையினரை அங்கிருந்து வெளியேற்ற வேண்டும் என்பவை உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை இந்திய அரசிடம் முன்வைத்து இந்த உண்ணாவிரதத்தை திலீபன் மேற்கொண்டிருந்தார்.

இந்திய அமைதிப்படையினர், இலங்கையில் நிலைகொண்டிருந்த போது, 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலய வளவில் ஆரம்பித்த இந்த உண்ணாவிரதம் செப்டம்பர் மாதம் 26 ஆம் திகதி திலீபன் உயிர் நீத்ததுடன் முடிவடைந்தது.

ஆயினும் திலீபனுடைய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை; இராசையா பார்த்திபன் என்பது அவருடைய இயற்பெயராகும்.

யாழ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றுவந்தபோது, 1983 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்த திலீபன், யாழ் மாவட்டத்தின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தபோதே இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

விடுதலைப்புலிகள் செல்வாக்குடன் இருந்த காலப்பகுதியில் திலீபனின் நினைவு தினம் சிறப்பாக அனுட்டிக்கபட்டு வந்தது.

ஆயினும் கடும் யுத்த மோதல்கள் இடம்பெற்றதன் பின்னர் கடந்த பல வருடங்களாக இந்த நினைவுதினம் கைவிடப்பட்டிருந்தது.a29th-memorial-day-of-thileepan314435373_992054107572635_5312373711175823200_o 14457443_303179686723741_1744124880102426688_n 14484972_737029379770947_1010919372895676425_n 14494602_303178586723851_6620378016510883860_n
14500230_992054130905966_735190001182339550_o

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com