யாழில் நான்கு நாட்களில் 35 பேருக்கு டெங்கு காய்ச்சல்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த  நான்கு நாட்களில் 35 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உள்ளதாக வைத்திய சாலை வட்டார புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2015 ஆம் ஆண்டு 1309 பேர் இந்த நோயின் தாக்குத்துக்குள்ளாகியிருந்துஇ அவர்களில் இரண்டு பேர் உயிரிழந்திருந்தனர். 2014 ஆம் ஆண்டு 1339 பேர் நோயின் தாக்கத்துக்குள்ளாகியிருந்து ஒருவர் உயிரிழந்திருந்தார்.

2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிகமான நோயாளர்கள் (357 நோயாளர்கள்) இனங்காணப்பட்டுள்ளனர். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அதிகளவான நோயாளர்கள் (348 நோயாளர்கள்) இனங்காணப்பட்டுள்ளனர் என அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds