யாழில் நடைபெற்ற தேசிய புத்தாண்டு விழா

தேசிய புத்தாண்டு நிகழ்வு இம்முறை யாழில் இன்று இடம்பெற்றது.
தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும்மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
யாழ் மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மேற்படி அமைச்சின் அமைச்சர் மணோ கணேசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.
இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.
அதேவேளை இந் நிகழ்வில் அரச அதிகாரிகள் தனியார் நிறுவனங்களின் பிரமுகர்கள் பொது மக்கள் பாடசாலை மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் இந் நிழ்வில் கலந்து கொண்டிருந்த பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் போட்டிகள் நடத்தப்கட்டு பரிசில்களும் வழங்கப்பட்டிருந்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com