யாழில் தொடரும் வாள் வெட்டு – கோண்டாவிலில் உணவகம் அடித்து நொருக்கப்பட்டது

யாழ் குடாநாட்டில் நேற்றும் நேற்று முன் தினமும் பல்வேறு இடங்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. கோண்டாவில் பஸ் டிப்போவுக்கு முன்பாக உள்ள உணவகம் ஒன்றுக்குள் நேற்று இரவு 7.30 மணியளவில் வாள்களுடன் நுளைந்த 10 இற்கும் மேற்பட்ட இளைஞர் குழுவொன்று உணவகத்தின் தளபாடங்களை அடித்து நொருக்கியதோடு பாதுகாப்புக்குப் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கமராக்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. அங்கு பலர் உணவருந்திக் கொண்டிருந்த போதும் அவர்களில் எவரும் தாக்கப்பட்டிக்கவில்லை. எனினும் அங்கு பணியாற்றிய ஒருவருக்கு முதுகுப்பகுதியில் சிறிய அளவில் வாள்வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

இதே வேளை யாழ்ப்பாணம் முடமாவடிப் பகுதி, மானிப்பாய் உள்ளிட்ட இடங்களில் மேற்கொள்ளம் பட்ட வாள்வெட்டுச் சம்பவங்களில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கோண்டாவில் வடக்கில் உள்ள பல்பொருள் வாணிபம் ஒன்றினுள் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வாள்களுடன் புகுந்த குழு ஒன்று வர்த்தகரை மிரட்டி சுமார் 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் பொருட்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com