யாழில் தொடரும் கைது வேட்டை – 48 மணித்தியாலத்தில் 49 பேர் கைது !!

கடந்த சனிக்கிழமை அதிகாலை முதல் இன்று அதிகாலை வரையான 48 மணித்தியாலத்தில் யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு மற்றும் வீதிச் சோதனை நடவடிக்கைகளின்போது 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடாநாட்டின் சில பிரதேசங்களில் இன்றும் விசேட அதிரடிப்படையினரும் பொலிசாரும் இணைந்து வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு தோன்றியள்ளது. மாலை வேளைகளில் விசேட அதிரடிப்படையின் ‘பீல்ட்பைக் குறூப்’ சந்திகளில் தீடீரெனத் தோன்றி சோதனை நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளது. இந் நடவடிக்கைகளின்போது சனிக்கிழமை மாலை அடையாள அட்டை இல்லை எனக் கூறி கோண்டாவிலில் 12 இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
வடமராட்சி, துன்னாலையில் நேற்றும் நேற்றுமுன்தினமும் மூன்று தடவை முழுமையான சுற்றிவளைப்புத் தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்போது நேற்று 10 பேரும், நேற்றுமுன்தினம் 3 பேருமாக 13 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை வடமராட்சி – அல்வாய் வடக்குப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பில் 18 பேர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று மாலை 6.00 மணிமுதல் இரவு 10.00 மணிவரை இடம்பெற்ற இச் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 18 பேர் கைது செய்யப்பட்டனர். இதேவேளை கடந்தவாரம் கொக்குவில் பகுதியில் வைத்து கோப்பாய்ப் பொலிசார் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் இன்று காலை 06 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com