யாழில்.தாயையும் மகளையும் காணவில்லை

யாழில். தாயையும் அவரது மூன்று வயது பெண் குழந்தையையும் காணவில்லை என யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
ஈச்சமோட்டை சுண்டுக்குளி பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் ஜானகி (வயது 23) மற்றும் அவரது மகளான மோகன்ராஜ் சுருதிகா (வயது 3) ஆகிய இருவருமே காணாமல் போயுள்ளனர்.
கடந்த 10ம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என அவர்களது உறவினர்களால் யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிசார் மேலதிக விசாரணை களை முன்னெடுத்து உள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds