யாழில் தனியார் தொலைக்காட்சிக்கு சீல் வைப்பு – சட்டவிரோதமாக இங்கியதாக குற்றச்சாட்டு

யாழ்.குடாநாட்டில் சட்டரீதியான ஆவணங்கள் எவையுமில்லாமல் இயங்கிவந்த அரசியல் கட்சி ஒன்றுக்கு சொந்தமான தொலைக்காட்சி நிலையத்திற்கு பொலிஸாரின் உதவியுடன் தகவல் தொடர்பாடல் அமைச்சும், TRCயும் இணைந்து சீல் வைத்துள்ளதுடன் நிலையத்தில் பணியாற்றிய ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

குறித்த நிறுவனம்  சட்டவிரோதமான முறையில் தொலைக்காட்சி , வானொலி நிலையம் என்பவற்றை இயக்கியதாகவும், அதனடிப்படையில் குறித்த நிறுவனம் கொழும்பில்  இருந்து வந்த தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையாக அதிகாரிகளால்  மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த  நிறுவனத்தில் இருந்து தொலைக்காட்சி மற்றும் வானொலி என்பவற்றின் ஒலிபரப்புக்கு பயன்படுத்தப்படும்  பொருட்கள் என்பவை கைபற்றப்பட்டதுடன்  அலுவலகத்தில் இருந்த பெரும்பான்மை  இனத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது  செய்யப்பட்ட  நபரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் அதிகாரிகள் யாழ் பொலிசாரிடம்  கையளித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com