யாழில் தனியாரது 6 ஆயிரத்து 581 ஏக்கர் காணியும் 172 விடுகளும் முப்படை அபகரிப்பில்

Armyயாழ் மாவட்டத்தில் தனியாருக்குச் சொந்தமான 61.15 ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள 172 வீடுகளையும் 9 ஆயிரத்து 647 தனி நபர்களிற்குச் சொந்தமான 6 ஆயிரத்து 581.04 ஏக்கர் காணிகளையும் முப்படையினரும் பொலிசாரும் கையகப்படுத்திவைத்திருப்பதாக யாழ் மாவட்டச் செயலக புள்ளிவிபரங்களை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவற்றில் படைத்தரப்பினர் அதிகபட்சமாக 9 ஆயிரத்து 205 தனிநபர்களுடைய 6 ஆயிரத்து 239.2 ஏக்கர் நிலத்தினையும் 10.10ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள 24 வீடுகளையும் கையகப்படுத்தி வைத்திருப்பதாகவும் கடற்படையினர் 357 தனிநபர்களுடைய 318.1 ஏக்கர் நிலத்தினையும் 37.72 ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள 79 வீடுகளையும் பொலிசார் 85 தனியார்களுடைய 23.74 ஏக்கர் நிலத்தினையும் 13.33 ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள 69 வீடுகளையும் கையகப்படுத்திவைத்திருக்கும்அதேவேளை இலங்கை கடற்படையினர் 37.72 ஏக்கர் நிலப்பிரப்பிலுள்ள 79 தனியார்களுடைய விடுகளைக் கையகப்படுத்தி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com