யாழில் குடும்பஸ்தர் வெட்டிப் படுகொலை

2042521004Murdrயாழ்ப்பாணம் சுழிபுரம் காட்டுப்புலம் பகுதியில் வீடொன்றுக்குள் நேற்று இரவு 11 மணியளவில் புகுந்த இனந்தெரியாத மூவர்   இளம் குடும்பஸ்தர் ஒருவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். சரமாரியாக வெட்டியதில் குடும்பஸ்தர் உயிரிழந்தார்.

அவரது மனைவி வெட்டுக் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்களின் இரட்டைக் குழந்தைகள் இவர்களுக்கு அருகில் இருந்தபோதும் இந்தச் சம்பவத்தில் அவர்களுக்குக் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை. சம்பவ இடத்தைச் சேர்ந்த 28 வயது இளம் குடும்பஸ்தரான ம.சுஜந்தன் என்பவரே வெட்டிக் கொலை செய்ப்பட்டவராவார். அவரது மனைவி தனுசியா காயமடைந்தார்.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,

இரவு  வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தோர் சரமாரியாக சுஜந்தனை வாளால் வெட்டியுள்ளனர். இவரின் கழுத்து தலையின் பின்பகுதி ஆகியவற்றில் சரமாரி வெட்டுக்கள் வீழ்ந்துள்ளன.

அவரைக் காப்பாற்ற முயன்றபோதே மனைவிக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த நபரும் அவரது மனைவியும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக அழைத்துவரப்பட்டனர்.அங்கு சுஜந்தனைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com