யாழில் காதலர் தின பாடல் வெளியீடு

காதலர் தினத்தை முன்னிட்டு  14ம் திகதி  “சப்தமி” கலையகத்தின் காணொளிப்பாடல் படைப்பொன்று வெளியாகின்றது. 

தமது வெளியீடு குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,
 இது ஆண்பெண் காதல் அல்ல. அதைத் தாண்டி, இன்றைய இளைஞர்கள் மீதான இளம் கலைஞர்களின் சமூகக்காதல். காதலர் தினம் என்பது வெறுமனே ஆண்களும் பெண்களும் காதலிப்பது மட்டுமல்ல. எங்களை, எங்கள் உடலை, எங்கள் குடும்பத்தை, நாம் சார்ந்த சமூகத்தைக் காதலிப்பதும் அதற்காக நாம் செய்யும் நல்ல விடயங்களும் காதல்தான். அந்தக் காதலின் வெளிப்பாடுதான் இந்தப் படைப்பு. “சப்தமி” கலையகத்தால் இம்மாதம் 14ம் திகதி காதலர் தினத்தன்று வெளியிடப்படவுள்ள இந்த, காணொளிப்பாடலுக்கு கேள்விக்குறியொன்றைத் தலைப்பாக வைத்திருக்கிறோம் இந்தப் படைப்பினூடாக சமூகத்துக்கு ஒரு அழகான, அவசியமான செய்தி சொல்லப்பட்டிருக்கிறது “போதை அறிவை மட்டுமன்றி வாழ்க்கையையும் அழிக்கும்” என்கிற தொனிப்பொருளோடு, வாழ்கிறபோது நாம், நம்மைக் காதலித்தால் இந்த வாழ்க்கை அழகானது என்கின்ற அற்புதமான செய்தியை, “சப்தமி” கலையக இளைஞர்கள், இந்தக் காதலர் தினத்தில் சொல்கின்றனர். பொதுவாகவே இளம் தலைமுறையினரும் கலைஞர்களும் சமூகம் மீதான அக்கறை அற்றவர்களாகவும், குறுகிய வட்டத்துக்குள் சுயநலத்தோடு வாழ்பவர்களாகவும் விமர்சிக்கப்படுகின்ற இன்றைய சூழலில், அந்த எண்ணப்பாட்டைத் தகர்க்கும்விதமாக இளைஞர்களால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான படைப்பு முயற்சிகளுக்குத் தோள்கொடுத்து, அவற்றை அனைவரிடமும் கொண்டுசேர்க்கவேண்டிய கடமை, ஊடகங்கள், சமூக நிறுவனங்கள் மற்றும் ஏனய துறைசார்ந்தவர்களுக்கு இருக்கிறது. அவ்வாறான செயற்பாடுகள் மற்றும் ஆதரவின் ஊடாக, இளைய தலைமுறையினரைச் சமூகப்பொறுப்பு மிக்கவர்களாக, சரியான வழியில் செல்லவைக்கலாம். சப்தமி அணி இதற்குமுன்னும் ஏராளமான படைப்புக்களைத் தந்திருந்தாலும் இளைஞர்களுக்கான விழிப்புணர்வாக, இளைஞர்களால் உருவாக்கப்பட்டு, எதிர்காலத் தலைவர்களைப் பிரசவிக்கின்ற கல்லூரியொன்றில் வெளியிடப்படுவதால் இந்தப்படைப்பு வித்தியாசமானது. எனவே இந்த நிகழ்வுக்குக் கரங்கொடுத்துப் பலம் சேர்த்து வெற்றிப்பயணமாக்க, எல்லோரையும் சப்தமி கலையகத்தினர் உரிமையுடன் அழைக்கின்றனர். இடம் – யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி. நாள் – 14 – 02 – 2016. நேரம் – மாலை 6.00 மணி. என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com