யாழில் கனேடிய உயர்ஸ்தானிகர்! முதலமைச்சர், அரசாங்க அதிபர்களுடன் சந்திப்பு

வடமாகாணத்திற்கு கனேடியத் உயர்ஸ்தானிகர் செல்லி வைட்டிங் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இருநாட்கள் தங்கியிருக்கும் அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.இன்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனையும் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் தேவநாயகன் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

காலையில் யாழ். மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்த அவர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார்.தொடர்ந்து வடக்கு மாகாணசபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் அலுவலகத்திற்குச் சென்று அவரை நோில் சென்று சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

கனேடிய அரசாங்கத்தின் நிதியுதவி யாழ். மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட
அபிவிருத்திப் பணிகள் மற்றும் சமூக மேம்பாட்டுத்திட்டங்கள் தொடர்பாகவும் இதில் கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக யாழ். மாவட்டத்தில் தொழில்வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவதிகளுக்கான தொழில் மையத்தினை அமைக்கவும் அதற்கான ஆலோசனைகளும் செயற்பாடுகளையும் முன்னெடுக்க கனேடிய அரசாங்கம் உறுதுணையாக இருக்கும் என இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் செல்லி வைட்டிங் உறுதி வழங்கினார்.

சுகாதாரம் உட்கட்டமைப்பு போன்ற துறைகளுக்கான உதவிகளையும் வழங்க
எதிர்பார்த்திருப்பதாகவும் அதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்க இலங்கை அரசுக்கு ஆலோசனைகளை முன்வைக்க இருப்பதாக இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் செல்லி வைட்டிங்
மாவட்ட அரசாங்க அதிபரிடம் தெரிவித்துள்ளார்.

இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் சமத்துவம் ஆன்மீகம் போன்ற பல செயற்பாடுகளை கொண்டுள்ள கனடா நாடு அதனை தன்னிறை கொண்டுள்ள மாற்றங்களை இலங்கை நாடு பெற்றுக்கொள்ள கூடிய
வகையில் அவர்களுக்கான புதிய நடைமுறைகளை முன்னெடுக்க எப்போதும் இலங்கை அரசாங்கத்துடன் உறுதுணையாக இருப்போம் என கனடா உயர்ஸ்தானிகர் செல்லி வைட்டிங் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com