யாழில் ஒன்றரை கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்பு

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில்  ஒன்றரை கிலோ ஹெரோயின் போதைப்பொருளுடன்  குடும்பஸ்தர் ஒருவர்      மதுவரித்திணைக்கள அதிகாரிகளினால்  கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (27) அதிகாலை    தொண்டமனாறு சந்திப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான       நபர் ஒருவர்    நடமாடுவதாக மதுவரி திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து உடனடியாக செயற்பட்ட   மது வரித்திணைக்கள உத்தியோகத்தர்கள்   குறித்த நபரை சோதனை செய்து அவர் வசம் இருந்த 485 கிராம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

தொடர்ந்து மேலதிக விசாரணையை குறித்த நபரிடம் மேற்கொண்ட மதுவரித் திணைக்கள அதிகாரிகள் வல்வெட்டித்துறை ஆளடி பகுதியில் உள்ள வெற்றுக்காணியில்  குறித்த நபரினால்   மறைத்து வைக்கப்பட்ட ஒரு கிலோ ஹெரோயின் போதைப்பொருளை பின்னர் மீட்டனர்.

இவ்வாறு போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நபர் அப்பகுதியை சேர்ந்த  60 வயது மதிக்கத்தக்க வேலாயுதம் என்கின்ற நபராவார்.இவரது குடும்பத்தினர் தற்போது இந்தியாவில் உள்ளதாக விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com