யாழில் ஊடக நிறுவனத்துள் அத்துமீறி நுளைந்த புலனாய்வாளர்கள் – மடக்கிபிடிப்பு

breaking news

breaking news

முள்ளிவாய்க்கால் நினைவு தின நிகழ்வினை அனுஷ்டித்துக்கொண்டிருந்த யாழில் உள்ள பத்திரிகை நிறுவனத்தினுள் இன்று காலை  அத்து மீறி உள் நுழைந்த பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவருவரை மடக்கிப்பிடித்த பத்திரிகை நிறுவன ஊழியர்கள் அவர்களை யாழ்.பொலிசாரிடம் ஒப்படைத்து உள்ளனர்.

குறித்த பத்திரிகை நிறுவனத்திற்குள் திடீரென அத்துமீறி நுளைந்து நிகழ்வுகளை புகைப்படம் மற்றும் வீடியோ  எடுத்தபோது  அதனை அவதானித்த குறித்த பத்திரிக்கை நிறுவனத்தின் ஊழியர்கள் அவர்கள் இருவரையும் விசாரித்துள்ளனர். அதன் போது தாம் பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறி  விட்டு  அங்கிருந்து தப்பி செல்ல முனைந்துள்ளனர்.

அதனை அடுத்து அவர்களை மடக்கி பிடித்த ஊழியர்கள் அவர்களை பத்திரிகை நிறுவனத்தினுள் தடுத்து வைத்திருந்து யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து அங்கு வந்த பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் இருவரையும் கையளித்ததுடன் தமது நிறுவனத்தினுள் அத்து மீறி உள் நுழைந்தமை மற்றும் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தமை என அவர்கள் மீது முறைப்பாடும் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds