யாழில் இருந்து படகில் தமிழகம் சென்றதாகக் கூறப்படும் துருக்கியர் கைது – இந்திய புலனாய்வுத்துறை தீவிர விசாரணை !!

யாழ்ப்பாணத்திலிருந்து  படகு மூலம் இராமேஸ்வரம் சென்றதாகக் கூறப்படும் துருக்கி நாட்டை சேர்ந்த மஹீர் தேவ்ரிம் என்பவரைக் கைதுசெய்துள்ள தமிழகப் பொலிசார் குறித்த நபர் உளவாளியா எனும் கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகப் பொலிசாருடன் இந்திய மத்திய புலனாய்வுத் துறையினரும் விசாரணையில் இணைந்திருப்பதாக அங்கிருந்து கிடைத்த தகல்கள் தெரிவித்துள்ளன.

44 வயது கொண்ட மஹீர் தேவ்ரிம் என்பவர் துருக்கிய நாட்டை சேர்ந்தவர். பல்வேறு பிரச்சனை காரணமாக இவர் கடந்த 1993ம் வருடம் துருக்கி நாட்டில் இருந்து வெளியேறி அங்கிருந்து புறப்பட்டு கஜகஸ்தான்
தாய்லாந்து மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 2017ம் வருடம் மார்ச் மாதம் இலங்கை வந்திருந்த அவர் இலங்கையின், தலைமன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதியில் வசித்து வந்துள்ளார். பாகிஸ்தான் அரசின் கொள்கைக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக இருக்கும் இவர் இந்தியாவிற்கு செல்ல பல முறை முயற்ச்சி செய்துள்ளார்.

இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று மதியம் 12மணிக்கு படகு ஒன்றுக்கு 25000 ரூபாய் செலுத்தி, தோணி மூலம் ப்ளாடிக் படகு மூலம் இராமேஸ்வரத்திற்கு புறப்பட்டு பின் இரவு 7மணிக்கு இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் மஹீர் தேவ்ரிம் என்பவரை, மத்திய மற்றும் மாநில உளவுத்துறை போலிசார் கைது செய்து இவர் தமிழகம் வந்ததற்கான முக்கிய காரணம் என்ன? யார் மூலம் வந்துள்ளார்? என்ற கோணத்தில் அவரிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவரிடம் பாஸ்போர்ட் மற்றும் அவர் கொண்டு வந்துள்ள பொருட்களையும் போலிசார் பறிமுதல் செய்து விசாரணை செய்து வருவது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com