யாழில் அலுவலகம் திறந்தது ஜே.வி.பி கட்சி

மக்கள் விடுதலை முன்னனியின் ( ஜே.வி.பி) யாழ் மாவட்டத்திற்காக புதிய அலுவலகம் இன்று காலை இல – 289 கண்டி வீதியில் உத்தியபூர்வமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது. 

மக்கள் விடுதலை முன்னனியின் புதிய அலுவலகம் திறப்பு நிகழ்வு மக்கள் விடுதலை முன்னனியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மக்கள் விடுதலை முன்னனியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா கலந்துகொண்டு புதிய அலுவகத்தினை திறந்து வைத்தார்.. 

இங்கு கருத்து தெரிவித்த மக்கள் விடுதலை முன்னனியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா, 

அரசாங்கத்தின் ஊடாக இவ்வாண்டு சுதந்திர தின நிகழ்வில் தமிழிலும் சிங்களத்திலும் தேசிய கீதம் பாடப்பட்டதை மக்கள் விடுதலை முன்னனி மிகவும் வரவேற்றுள்ளதாகவும் அதனுடாக எமது தமிழ் மக்களின் ஒரு அங்கம் அந்த சுதந்திர தினத்தில் சுதந்திரம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்;. 

கடந்த காலமாக இருக்கட்டும் நிகழ்காலமாக இருக்கட்டும் எதிர்வரும் காலங்களிலும் இனவாத்தினை தோற்கடிப்பதற்கு அனைவரும் தயாராக வேண்டும் எனவும் தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com