யாழில் அதிரும் இலஞ்ச மோசடிகள் – பல இலட்சங்களைச் சுருட்டினாரா நல்லூர் பிரதேச சபை வருமானவரி பதிசோதகர்

vakeesam-braking-newsநல்லூர் பிரதேச சபையின் பிரதான காரியாலயத்தில் பணி புரியும் வருமான பரிசோதகர் ஒருவரால் பல மில்லியன் பெறுமதியானதொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் எவ்வளவு ரூபா கையாடல் நடந்தது என்பது தொடர்பில்  இன்னமும் சரியான தொகை கணிப்பிட முடியவில்லை  என அறியமுடிகிறது.

விளம்பர நிறுவனங்களது  விளம்பரப் பதாதைகளைக் காட்சிப்படுத்தலுக்காக பெற்றுக்கொள்ளும் பணம் , தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான அனுமதிகள் போன்ற நடவடிக்கைகளின் போது கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக நடந்துவரும் மோசடி அம்பலத்துக்கு வந்துள்ளது.

இவற்றோடு பிரதேச சபைகளின் அனுமதி மீறி மேற்கொள்ளும் நடவடிக்கைககளைக் கண்டும் காணாது விடுவதற்காக பெறப்படும் இலஞ்சப்பணம் மற்றும் பிரதேச சபையின் சந்தை, குத்தகை கடைகள், வாடகை ஒப்பந்தங்கள், பிரதேச சபையின் சட்ட நடவடிக்கைகள் வழக்குத்தாக்கல்கள், அனுமதியற்ற கட்டட அமைப்பு வழக்குத்தாக்கல்கள், உடமை மாற்றங்கள் உள்ளிட்டவற்றிலும் நிதிக் கையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சில காலங்களுக்கு முன் சபைகள் அரசியல் பிரமுகர்களால் நிர்வகிக்கப்பட்டபோது தவிசாளருக்கு லஞ்சம் பெற்றுக்கொடுக்கும் ஒரு கருவியாகவும் மேற்படி நபர் நடந்துகொண்டது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அமைச்சரான முதலமைச்சருக்கு மக்கள் தெரியப்படுத்தியதன் பிரகாரம் மேற்படி அலுவலரை உடனடியாக சுன்னாகம் பிரதேச சபைக்கு இடம் மாற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒன்பது தடவைகள் அனுமதி பெறப்படாது லஞ்ச பணத்தில் வெளிநாடுகள் சென்று வந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அனுமதி பெறாது அரச அலுவலர் ஒருவர் நாட்டை விட்டு செல்வது மிக பெரிய குற்றமாகவும் தொடர்ச்சியாக திட்டமிட்டு சென்றது தொடர்பில் குறைந்தபட்ஷம் அரச பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார் எனவும் மோசடி தொடர்பான பெறுமதிகள் கணக்கிடப்பட்டதும் அவை சட்டரீதியான நடவடிக்கைகளின் மூலம் அறவிடப்படும் எனவும் இதனுடன் தொடர்பான ஏனைய அதிகாரிகள் மீதும் பொருத்தமான நடவடிக்கைகள் தொடரும் எனவும் இதுவிடயம் தொடர்பில் பாதிக்கப்படடவர்கள் இருப்பின் தங்கள் தகவல்களை முதலமைச்சரின் அமைச்சுக்கு அனுப்பி வைக்கலாம் எனவும் இவ் விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாணம் மாநகர சபையில் 17 இலட்சம் ரூபா நிதிக் கையாடல் இடம்பெற்றதாக அங்கு திட்டமிடல் பிரிரிவ் பணியாற்றும் பெண் ஒருவருக்கு எதிராக ஒழுக்காற்று று விசாரணை நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com