யார் கேட்பினும் கச்சதீவைக் கொடுக்கோம் – ஊடக பிரதி அமைச்சர்

Media minister diputyஇந்தியப் பிரதமர் மேடியை டெல்லியில் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையைப் பாதுகாக்க, 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இலங்கையுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்துள்ள நிலையில் கச்சதீவையாரும் கேட்கமுடியாது கேட்டால் நாங்கள் கொடுத்துவிடவும் மாட்டோம் என்று ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தாரன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில்  இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலே மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளர்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கச்சதீவை, இன்று நேற்றல்ல, அத்தீவை கேட்டுக்குகொண்டுதான் இருகின்றார். அது முடிந்துபோன விடயமாகும். கச்சதீவையாரும் கேட்கமுடியாது கேட்டால் நாங்கள் கொடுத்துவிடவும் மாட்டோம் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com