சற்று முன்
Home / செய்திகள் / யாரை பாதுகாக்க இந்தச் சதி ??? – யாழில் தமிழ் மக்கள் உயிருடன் விளையாடும் மிகப்பெரும் நாடகம்?

யாரை பாதுகாக்க இந்தச் சதி ??? – யாழில் தமிழ் மக்கள் உயிருடன் விளையாடும் மிகப்பெரும் நாடகம்?

யாழ்.குடாநாட்டு மக்கள் முற்றாக கொரோனோ அச்சத்தில் முடங்கியிருங்க மிகப்பெரும் உண்மையினை மறைக்கும் நாடகம் அரங்கேற தொடங்கியுள்ளது.

இதன் பிரகாரம் சுவிஸிலிருந்து வருகை தந்த போதகரிற்கு கொரோனா வைரஸ் தொற்று இருந்திருக்கவில்லையென யாழ்.காவல் நிலைய பொறுப்பதிகாரி கொழும்பு சிங்கள தொலைக்காட்சியொன்றிற்கு நேரடியாக தொலைபேசி வழி பேட்டியொன்றை இன்று வழங்கியுள்ளார்.

இதனிடையே இக்காவல்துறை அதிகாரியே வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரை இவ்விடயத்தில் அச்சுறுத்தியிருந்ததாக முன்னர் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

கொரோனோ நோயாளிகளை வைத்தியசாலைக்கு அனுமதிக்காமை மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை மூடி மறைத்தமை தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சக வைத்திய நிபுணர்களது கடும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளார்.

இதன் பின்னரே தாவடியை சேர்ந்த முதலாவது கொரோனோ தொற்றுக்குள்ளான நோயாளி பற்றிய தகவல்கள் பணிப்பாளரிடமிருந்து வெளியாகியிருந்தது.

டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் வாயே திறந்திருந்தராத பணிப்பாளர் சுமார் இரு மணி நேரத்தின் பின்னர் முதல் நாளிரவு கிடைத்த அறிக்கையினை கசிய விட்டிருந்தார்.

இந்நிலையில் சர்ச்சைக்குரிய மத போதகரை காப்பாற்றவும் பெருமளவு பணம் வாரி இறைக்கப்படுவதுமான குற்றச்சாட்டில் யாழ்.காவல்நிலைய பொறுப்பதிகாரி நேரடியாக சிங்கள தொலைக்காட்சிக்கு மத போதகரிற்கு தொற்று இல்லையென பேட்டியளித்துள்ளார்.

குறிப்பாக தாவடியை சேர்ந்த பொதுமகனிற்கே கொரோனா தொற்று இருந்தது,அவர் மதபோதகரை சந்தித்தமையால் மத போதகரிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டதென நிறுவ தற்போது முழு வீ;ச்சில் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.

அதற்கேதுவாக தாவடி பொதுமகனால் ஏற்பட்ட நோய் பரம்பல் பற்றிய மருத்துவ அறிக்கைகளை மட்டும் வெளியிட்டு கதையினை திருப்பி விட முயற்சிகள் மும்முரமடைந்திருப்பதாக போதனா வைத்தியசாலையின் உள்ளக தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

இதற்கேதுவாக மருத்துவ அறிக்கைகள் சில முன்கூட்டியும் ஏனையவை தாமதித்தும் வெளியிடப்படுவதாக சொல்லப்படுகின்றது.

குறித்த மத போதகர் ஆராதனையில் பங்கெடுத்த போதும் கடுமையான காய்ச்சலுடன் இருந்துள்ளதுடன் ஒலி வாங்கியை கூட கையில் வைத்திருக்க முடியாது திண்டாடியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இயலாமை காரணமாக அவர் அவசர அவசரமாக கொழும்பு திரும்பியிருந்தார்.

இதனிடையே குறித்த மத போதகர் வருகை தந்தமை மற்றும் திரும்பி சென்றமை காவல்துறை ஆசீர்வாதத்துடன் நடந்ததாக பகிரங்கமாகவே வடக்கு ஆளுநரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்;நிலையில் கதையினை மாற்றியெழுத வழமையான இலங்கை காவல்துறை பாணியில் நேரடியாக ஊடகத்திற்கு வழங்கப்பட்ட பேட்டி மற்றும் போதனா வைத்தியசாலை பணிப்பாளரது நகர்வுகள் அனைத்து மட்டங்களிலும் சந்தேகத்தையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.

இலங்கை காவல்துறை ஊடக பேச்சாளர் தவிர்ந்த எவரும் நேரடியாக ஊடகங்களிற்கு செவ்வி வழங்கமுடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி மூலம் – நன்றி – பதிவு , உதயன், தினக்குரல், சுடரொளி, காலைக்கதிர்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com