யானைத் தந்தத்துடன் சிவில் பாதுகாப்பு படை வீரர் கைது!

மிஹிந்தலை – மாத்தளை சந்திக்கு அருகில், யானைத் தந்தம் வைத்திருந்ததாக கூறப்படும் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் வசம் இருந்து 3 யானைத் தந்தங்கள் மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட நபர், இராஜங்கனை – பஹலமாரகஹவெவ பகுதியைச் சேர்ந்தவர் என்பதோடு, கருவலகஸ்வெவ சிவில் பாதுகாப்பு படையின் மாகாண அலுவலகத்தில் கடமையாற்றுபவர் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com