சற்று முன்
Home / செய்திகள் / ‘மௌன நிழல்கள்’ என்ற தலைப்பில் காணாமல்போனோர் தொடர்பாக கவிதைப் போட்டி

‘மௌன நிழல்கள்’ என்ற தலைப்பில் காணாமல்போனோர் தொடர்பாக கவிதைப் போட்டி

இலங்கையில் காணாமல்போனவர்களின் பிரச்சனை தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக கவிதைப் போட்டி ஒன்றை நடத்தவுள்ளதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல்- மனித உரிமை அமைப்பு அறிவித்துள்ளது.
உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் இலங்கையர்கள் மத்தியில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் இந்தக் கவிதைப் போட்டியை நடத்தவுள்ளதாக அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கை கூறுகின்றது.
‘மௌன நிழல்கள்’ என்ற இந்த தலைப்பில் நடத்தப்படும் இந்தக் கவிதைப் போட்டியின் நடுவர்கள் குழுவில் மூன்று மொழிகளையும் சேர்ந்த முன்னணி எழுத்தாளர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
உலகில் அதிகளவானவர்கள் காணாமல்போகச் செய்யப்பட்டுள்ள நாடாக, இலங்கையே இருப்பதாகவும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் அறிக்கை கூறுகின்றது.
பல தசாப்தகால போரில் அங்கு குறைந்தது 80 ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com