மோட்டார் சைக்கிள் தலைக் கவசங்களுக்கான தரச் சான்றிதழ் அமுலில்

87f6e960559d27eddbf36b3732e0398d_Lஇலங்கைத் தரச் சான்றிதழ் பெற்ற, மோட்டார் சைக்கிள்களுக்கான தலைக்கவசங்களை அணிவதற்கான சட்ட விதிகள் இன்று (முதலாம் திகதி வியாழக்கிழமை) முதல், அமுல்படுத்தப்பட்டுள்ளது.
.
மோட்டார் சைக்கிள்களினால் ஏற்படும்; மரணங்களைக் குறைத்துக்கொள்ளும் நோக்கத்தில், இந்த நடைமுறையை  நுகர்வோர் அதிகாரசபை முன்னெடுத்துள்ளது.
தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில் இடம்பெறும் விபத்துக்களால், ஒரு நாளைக்கு 7 அல்லது 8 பேர்உ யிரிழக்கின்றனர். உரிய தரங்களில் இவை தயாரிக்கப்பட்டிருக்கவில்லை என்பது கண்டறியப்பட்டமையினால் தரச் சான்றிதழ் பெற்ற, மோட்டார் சைக்கிள்களுக்கான தலைக்கவசங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன என்று நுகர்வேர்ர் அதிகார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம், இலங்கைத் தரநிர்ணய நிறுவனத்தின் அனுமதி பெறப்படாத தலைக்கவசங்களை விற்பனை செய்தல், தடை செய்யப்பட்டுள்ளது. இன்று முதல், இந்த அனுமதி பெறாத தலைக்கவசங்களை விற்பனை செய்யும் மற்றும் விற்பனை நிலையங்களுக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவ்வாறான தலைக்கவசப் பாவனையாளர்கள், தங்களது தலைக்கவசங்களை மாற்றிக்கொள்ள, குறிப்பிட்டதொரு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Read 16 times

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com