மைத்திரி – மகிந்த இணைவு குறித்து இரகசியப் பேச்சுவார்த்தை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இருவரையும் இணைக்கும் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தின் பிரபல அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் சிலர் நேற்று இரவு சினமன் கிராண்ட் “சியரஸ் பப்” இல் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.

கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற மே தின பேரணியை அடுத்து ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி காரணமாக இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடல் நள்ளிரவு முதல் விடியும் வரையில் நீண்ட நேரம் நடைபெற்றதாக தெரிய வருகிறது.

இந்த சந்திப்பில் மஹிந்த அமரவீர, சந்திம வீரகொடி, லசந்த அழகியவன்ன மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் பங்கேற்றுள்ளதாக அறியமுடிகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com