மைத்திரி தலைமையில் சு.க. வின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் – மகிந்தவிற்கும் அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுக் குழு, அகில இலங்கை நிர்வாக சபை ஆகியவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று கொழும்பில் கூடவுள்ளன.

கட்சியை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக்கூட்டத்துக்கு, முன்னாள் ஜனாதிபதியும் எம்.பியுமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்தக் கூட்டம் கட்சியின் யாப்பிற்கு அமைய ஏற்பாடு செய்யப்படுவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்தார். அவர் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றினார்.
இளைஞர் முன்னணியின் இணைப்பாளர் தேசப்பிரிய ரத்னாயக்க கருத்து வெளியிடுகையில், இளைஞர் முன்னணியின் மாவட்ட சம்மேளனம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடத்தப்படுமென்றும் தெரிவித்தார்.

கொழும்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சம்மேளனத்தை நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் கல்விக்கூடமும்; ஆரம்பிக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com