மைத்திரியின் யாழ் விஜய ஒத்திவைப்பிற்கு அரசியல் நெருக்கடியே காரணமாம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு இன்று (04) வருகைதந்து பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்தநிலையில் நாட்டில் ஏற்படக்கூடிய அரசியல் பதற்ற நிலைமையைக் கருத்திற்கொண்டுடே  அவரது யாழ்ப்பாண விஜயம் பிற்போடப்பட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் 10 பேர், அதிலிருந்து விலகி, ஒன்றிணைந்த எதிரணியில் இன்று இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த பின்னணியில் அவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டால், அரசாங்கத்திலும் கட்சியிலும் ஏற்படக்கூடிய நெருக்கடி நிலைமைகளைக் கருத்திற்கொண்டே, ஜனாதிபதியின் யாழ். விஜயம் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் வருகைதரவிருந்த ஜனாதிபதி திறந்துவைக்க ஏற்பாடாகியிருந்த “ஜனாதிபதியிடம் தெரிவிக்க” செயற்றிட்டத்தின் பிராந்திய அலுவலகத் திறப்பு நிகழ்வும் பிற்போடப்பட்டுள்ளது”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com