சற்று முன்
Home / செய்திகள் / மே 18 முள்ளிவாய்க்கால் நோக்கிய மோட்டார் வாகன பேரணிக்கு பல்கலை மாணவர்கள் அழைப்பு

மே 18 முள்ளிவாய்க்கால் நோக்கிய மோட்டார் வாகன பேரணிக்கு பல்கலை மாணவர்கள் அழைப்பு

முள்ளிவாய்கால் நினைவேந்தல் தினமான மே 18 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக முன்றலில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கிய மோட்டார் வாகன பேரணி ஒன்றுக்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் விடுக்கப்பட்டள்ள செய்திக்குறிப்பில்,

“மே 18 முள்ளிவாய்க்கால் தினத்தினை எந்தவித அரசியற்கலப்படமின்றிய ஒரே குரலில் ஒன்றித்த தமிழராய் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பல்வேறு சமுக அமைப்புக்களும் ஒன்றினைந்து பல்வேறு அரசியற்தடைகள் மத்தியிலும் நெறிப்படுத்தி வருகிறார்கள்.
இதன் நிமித்தம் மே 18 யாழ்பல்கலைக்கழக முன்றலில் இருந்து காலை 7.30 மணியளவில் முள்ளிவாய்க்கால் செல்வதற்கான மோட்டார் வாகன பேரணி ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

காலை 7.30 க்கு யாழ் பல்கலையில் இருந்து ஆரம்பமாகி பலாலி வீதியின் ஊடாக வேம்படி சந்தியை கடந்து A9 பிரதின வீதியை அடைந்து A9 வீதி ஊடாக நாவற்குழி கைதடி ஊடாக சாவகச்சேரி கொடிகாமத்தை வந்தடையும்.

வடமராட்சிப்பகுதியிலிருந்து இணைபவர்கள் 8.30 மணியளவில் கொடிகாமத்தில் இணைந்துகொள்ளுங்கள் அங்கிருந்து நகர்ந்து 9.10 அளவில் பரந்தன் சந்தியை வந்தடையும்.

கிளிநொச்சியில் இருந்து வருபவர்கள் 9 மணிக்கு இவ்விடம் வருகை தரவும். பரந்தன் சந்தியில் இருந்து A35 வீதியின் ஊடக புதுக்குடியிருப்பு சந்தியை 10.15 அளவில் வந்தடையும் அங்குள்ள இளைஞர்கள் அதில் வந்து இணைந்து கொள்ள முடியும். அங்கிருந்து அவ்வீதியால் நகர்ந்து 10.45 மணிக்கு முள்ளிவாய்காலை வந்தடையும்.

எமது ஒற்றுமையை நிருபிப்பதற்கான ஒரு களம் இதுவாகும், தயவு செய்து பொது அமைப்புக்களும், விளையாட்டுக்கழகங்களும், ஏனைய அனைத்து குழுக்களும், ஒவ்வொரு தனி நபர்களும், இந்த பேரணியில் உங்கள் உங்கள் மோட்டார் வண்டிகளுடன் வந்து எமது பேரணியின் மூலமான ஒற்றுமையை விபரிப்பதுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பூரணமான ஒன்றித்த தமிழராய் நினைவுகொள்ள அழைப்பு விடுகின்றோம்.

மோட்டார் வண்டி இல்லாதவர்களிற்கான பேருந்து ஒழுங்குகளும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. பேரணியின் போது இடையில் மோட்டார் வண்டியில் இணைந்துகொள்பவர்களும் இணைந்து கொள்ளலாம்.

இதன்போது கறுப்பு மேலாடை அணிவது வரவேற்கத்தக்கது

தயவு செய்து இந்த செய்தியை #Viber, #what’s up, #facebook மற்றும் ஏனைய ஊடகங்கள் வாயிலாக பகிர்ந்து ஒற்றுமைக்கான ஊட்டலை ஏற்படுத்துங்கள். இது எம்மவர்க்கான நினைவுதினம்” – என்றுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com