மே 12 முதல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எதிர்வரும் 12ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் மே 18 வரை வடக்கு கிழக்கில் அனுஸ்டிக்கப்படுமென வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.
முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் மே – 18 ஆம் திகதி நடைபெறவிருக்கும் நிலையில், 12 ஆம் திகதி தொடக்கம் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நாள் நினைவேந்தல் குறித்து யாழ். ஊடக அமையத்தில் இன்று மாலை 2.30 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் இதனைக் குறிப்பிட்டார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஒழுங்குகள் வடமாகாணத்திலும், தமிழகத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் 12 ஆம் திகதி ஆரம்பமாகின்றது. முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா காலத்தில் சுமார் 600 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்ட செம்மணி மண்ணில் 12 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

தொடர்ந்து 13 ஆம் திகதி கிழக்கு மாகாணத்திலும், 14 ஆம் திகதி நவாலி படுகொலை அரங்கேறிய சென்பீற்றர் தேவாலயத்திலும், 15 ஆம் திகதி குமுதினி படுகொலைக்காக நெடுந்தீவிலும் 16 ஆம் திகதி 17 ஆம் திகதி வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இறுதி நாள் நிகழ்வு 18 ஆம் திகதி முள்ளிவாய்கால் மண்ணில் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையினில் நினைவேந்தல் முன்னெடுக்கப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com