மேடைப் பேச்சு வாக்குப் பொறுக்க மட்டுமே !!உடைத்தார் பொருளாளர் – நிறுத்தினார் பேச்சாளர்

தேர்தல் காலத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் உறுப்பினர்கள் பேசிய பேச்சுக்கள் எல்லாம் தேர்தலில் வெல்வதற்காகன பேச்சுக்கள் மட்டுமே ஆனால் அதன் பின்னர் பேசும் பேச்சுக்கள் வேறு மாதிரியானவையாக இருக்கவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி தனது இளைஞர் அணியினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

தரமிழரசுக் கட்சியின் மாவட்ட இளைஞரணிக் கூட்டம் இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டப கட்டடத் தொகுதியில் நடைபெற்றது. யாழ் மாவட்டத்தின் 10 தொகுதியிலிருதும் ஒவ்வொரு தொகுதிக்கு 10 உறுப்பினர்கள் என தெரிவு செய்யப்பட்டு உறுப்பினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். வெளியாட்கள் எவரும் கூட்டத்தில் கலந்துகொள்ளாதவாறு கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட உறுப்பினர்கள் மட்டும் அழைப்பிதழ் பரிசோதிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நிகழ்வின் ஆரம்பத்தினை மட்டும் படம் எடுக்க ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஊடகவியலாளர்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரினால் நிர்வகிக்கப்படும்  ஊடகத்திற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகத் தெரியவருகின்றது.

அங்கு உரையாற்றிய பொருளாளர் கனகசபாபதி குறிப்பிடுகையில்

தேர்தல் காலத்திலே மேடையில் நின்று பேசுற பேச்சு வேறை. அது வெல்லவேணும் எண்டுறதுக்காகப் பேசுற பேச்சு. நாங்கள் நிர்வாகத்தில் வருகின்றபோது பேசுற பேச்சு. நடக்கிற நடைவேறு (பேச்சு இடைநிறுத்தப்பட்டது – சுமந்திரன் எழுந்து சென்று பேசிக்கொண்டிருந்தவருடன் கதைக்கிறார்)  (தொடர்ந்து பேசுகின்றார்) ஆகவே உங்களிடமிருந்து நாங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம். நன்றி வணக்கம்.

அவர் பேசிக்கொண்டிருந்த விடையம் பாராதூரமான விளைவுகளை உருவாக்கிவிடப் போகின்றது என்பதை உணர்ந்து  திகைப்படைந்த சுமந்திரன் உடனே அவரின் காதில் எச்சரித்துப் பேச்சை மாற்றினார்.  இதேவேளை அங்கு உரையாற்றிய மாகாணசபை உறுப்பினர் ஒருவர் முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்ததால் தம்மைப் பொதுமக்கள் தாக்க வருவதாகவும் விசேட அதிரடிப்படையின் உதவியை நாடவுள்ளதாகவும் கூறியிருந்தார் .

இளைஞர்கள் கேள்விகேட்க முற்பட்டபோதும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என்றும் தாம் கூறியபடி நடக்குமாறு அறிவுறுத்தப் பட்டதாகவும் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் சிலர் கூறினார் .

இதேவேளை பொருளாளர் கனகசபாபதியின் உரை குறித்து இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த தமிழரசுக் ,கட்சியின் முக்கியஸ்தர் ஒருவரைத் தொடர்புகொண்டு கேட்டபோது தான் அவரது உரையை நன்றாகச் செவிமடுக்கவில்லை என்றும் ஆனால் அவர் அவ்வாறு உரையாற்றியிருந்தால் அது வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய விடையம் என்றும் குறிப்பிட்டார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com