மூன்று பச்சிளங் குழந்தைகளுடன் தாய் தற்கொலை – கடன் கொடுத்து ஏமாந்ததால் விபரீத முடிவு

ஒரு கோடியே 17 இலட்சம் ரூாவினைக் கடனாக வாங்கியவர்கள் அக்கடனைத் திரும்பக் கொடுக்க மறுத்த நிலையில் கடன் கொடுத்த குடும்பம் ஒன்று நெருக்கடி தாங்க முடியாத நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளது. அரியாலையில் நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் மூன்று பச்சிளங் குழந்தைகள் உட்பட பெண் ஒருவர் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவரது கணவரும் அண்மையில் தற்கொலை செய்து உயிரிழந்திரந்திருந்தார்.
எ.வி.ஒழுங்கையை சேர்ந்தவர் கிருஷாந்தன். அவரது மனைவி சுநேந்திரா (வயது 28) . அவர்களுக்கு கிருஷாந்தன் ஹர்ஷா (வயது 04), கிருஷாந்தன் சஜித் (வயது 02), கிருஷாந்தன் சரவணா (வயது 01) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
குடும்பத்தின் தலைவரான கணவன் கிருஷாந்தன் தனது குடும்ப நண்பர் ஒருவரிடம் ஒரு கோடியே 17 இலட்ச ரூபாய் பணத்தினை கடனாக கொடுத்துள்ளார். அக் கடன் தொகையை நண்பர் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பிறரிடமும் பணம் பெற்று நண்பனுக்கு என பெருமளவான கடன் கொடுத்த காரணத்தால் கணவன் பூர்விக சொத்துக்கள் சிலவற்றை விற்கும் நிலைக்கு கிருஷாந்தன் தள்ளப்பட்டுள்ளார். நண்பனுக்கு கடன் கொடுக்கும் போது சாட்சியமாக நின்ற நண்பனின் மனைவி மற்றும் நண்பனின் தம்பி ஆகியோரிடம் கடனைத் திரும்பக் கேட்டிருக்கிறார். கடன் எந்த விதமான பொறுப்புக்களும் இல்லாமல் நட்பின் அடிப்படையில் , நம்பிக்கையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு உள்ளது. கடனை ஆறு மாத காலத்திற்கு பின்னர் திருப்பி கேட்ட போது , காசோலையை வழங்கியுள்ளார். குறித்த காசோலையை வங்கியில் வைப்பு செய்ய போது , வங்கியில் பணம் இல்லாமல் அது திரும்பியுள்ளது. அதன் பின்னர் கடனை கேட்க நண்பன் , நண்பனின் , மனைவி மற்றும் நண்பனின் தம்பியிடம் சென்ற போது வாங்கிய கடனை கொடுக்காது ஏமாற்றியதுடன் முடிந்தால் பணத்தினை வாங்கி பார் என சவால் விட்டுள்ளனர். அத்துடன் தம்பியையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். அதன் பின்னர் கடன் தொகை திருப்பி தராது ஏமாற்றியமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்து நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு விசாரணையின் பின்னர் பத்து இலட்ச ரூபாய் பணத்தினை சிறிது சிறிதாக கடனை பெற்றவர் கொடுத்துள்ளார். மிகுதி பணம் கொடுக்கவில்லை.
அந்நிலையில் கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி வழக்குக்காக நீதிமன்றுக்கு சென்று வந்த பின்னர் மறுநாள் 31ஆம் திகதி குடும்பத்துடன் உயிரை மாய்த்து கொள்வதற்கு முயற்சித்துள்ளார்கள். முதலில் கணவன் மருந்தை குடித்துள்ளார். அவர் மருந்தை குடித்து அவஸ்தைப்பட்டத்தை பொறுக்க முடியாத மனைவி தானும் மருந்தை அருந்தாது தனது பிள்ளைகளுக்கும் மருந்தை அருந்த கொடுக்காது கணவனை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உடனடியாக கணவனை வைத்திய சாலைக்கு கொண்டு சென்று அவரை காப்பாற்றும் முயற்சித்துள்ளார்.
மருத்துவ மனையில் சிகிச்சை பயனளிக்காத நிலையில் கணவனான இராமன் கிருஷாந்தன் கடந்த மாதம் 03ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கணவன் சிகிச்சை பெறும் வேளையில் வைத்திய சாலையில் வைத்து தாய் , மற்றும் சிறிய தாயிடம் தான் உயிரிழந்தால் , தனது மனைவி பிள்ளைகளை கவனமாக பார்க்குமாறு உறுதி வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கணவனின் உயிரிழப்பின் பின்னர் மனைவி பிள்ளைகளை உறவினர்கள் பாதுகாப்பாக பார்த்துகொண்ட நிலையில் நேற்று வீட்டில் தாயார் மட்டும் இருந்த நிலையில் அவரை தூங்க வைத்த பின்னர் தனது பிள்ளைகளின் உயிரை மாய்த்த பின்னர் , தானும் உயிரிழந்துள்ளார் சுநேந்திரா எனும் குடும்ப பெண்.
அவர் தனது உயிரை மாய்த்து கொள்ள முதல் , யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மற்றும் தனது குடும்பத்தினருக்கு இரு கடிதங்களை எழுதி வைத்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com