சற்று முன்
Home / செய்திகள் / மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போன வயோதிப பெண் சடலமாக மீட்பு – வடமராட்சியில் சம்பவம்

மூன்று நாட்களுக்கு முன் காணாமல் போன வயோதிப பெண் சடலமாக மீட்பு – வடமராட்சியில் சம்பவம்

வடமராட்சி பகுதியை சேர்ந்த வயோதிப பெண் கடந்த மூன்று நாள்களாக காணாமற்போன நிலையில் இன்று சனிக்கிழமை பாழடைந்த வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

புலோலி கிழக்கை சேர்ந்த சோமஸ்கந்தன் விசாலாட்சி (வயது 80) எனும் வயோதிப பெண்ணே சடலமாக மீட்கபட்டு உள்ளார்.

வயோதிபப் பெண் கடந்த 20ஆம் திகதி காணாமற்போயுள்ளார். அது தொடர்பில் உறவினர்களால் பருத்தித்துறை போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் வீட்டிற்கு சற்று தொலைவில் உள்ள வீடொன்றில் இருந்து அவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com