சற்று முன்
Home / செய்திகள் / மூன்று நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும்

மூன்று நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும்

இன்று முதல் மூன்று நாட்களுக்கு பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு, வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 – 150 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலையை அடுத்து, எல்ல – வெல்லவாய பிரதான வீதியின் 25 மைல் கல்லுக்கு அருகாமையிலுள்ள பகுதி தாழிறங்கியுள்ளது.

எல்ல – வெல்லவாய பிரதான வீதியூடான போக்குவரத்து ஒருவழிப் பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

எல்ல – வெல்லவாய பிரதான வீதியை பயன்படுத்துவோர் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கண்டி – பன்வில – ஆத்தலை கீழ் பிரிவு தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆத்தலை தமிழ் வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

35 குடும்பங்களைச் சேர்ந்த 130 பேர் இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பலத்த மழையை அடுத்து, ஆத்தலை கீழ் பிரிவு தோட்டத்தில் நிலம் தாழிறங்கியுள்ளதுடன், குடியிருப்புகளின் சுவர்களிலும் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன.

கடந்த நான்கு வருடங்களாக மண்சரிவு அபாயத்திற்கு மத்தியிலேயே தாம் வாழ்ந்து வருவதாகவும், இது தொடர்பில் பல தரப்பினருக்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் மக்கள் தெரிவித்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com