மூன்று அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக முறைப்­பாடு!

அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியைச் சேர்ந்த மூன்று அமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக ஐக்­ கிய தேசியக் கட்சியினர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் முறைப்­பாடு செய்­துள்­ளனர்.

அமைச்­சர்­க­ளான டிலான் பெரேரா, சுசில் பிரேம் ஜயந்த மற்றும் லக்ஸ்மன் யாப்பா அபே­வர்­தன ஆகிய மூவ­ருக்­கெ­தி­ரா­கவே இவ்­வாறு ஜனா­தி­ப­தி­யிடம் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்த மூன்று அமைச்­சர்­களும் அரசாங் ­கத்தில் இருந்­து­கொண்டே அர­சாங்­கத் தின் மீதும் அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்­கின்ற அமைச்­சர்கள் மீதும் பகி­ரங்கமாக குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்துவரு­வ­தா­கவும் இதனால் அரசாங்­கத் தின் மீது மக்கள் அதி­ருப்­தி­ கொள்­கின்­றனர் என்றும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.

இவ்­வாறு குறித்த மூன்றுஅமைச்­சர்­க­ளுக்கு எதி­ராக முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் ஜனா­தி­பதி எடுக்கும் நட­வ­டிக்­கை­களை அடுத்தே தாம் அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கை­களை எடுக்­க­வுள்­ள­தா­கவும் ஐக்­கிய தேசிய கட்­சினர் தெரி­வித்­துள்­ளனர்.

அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் குறித்த மூன்று அமைச்­சர்­களும் அர­சாங்­கத்­தையும் குறிப்­பாக ஐக்­கிய தேசிய கட்­சியைச் சேர்ந்த அமைச்­சர்­க­ளையும் கடு­மை­யாக விமர்­சித்து வரு­வ­தாக தொடர்ச்­சி­யாக குற்­றச்­சாட்­டுக்கள் முன்வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையிலேயே தற்போது அவர்களுக்கு எதிராக ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com