சற்று முன்
Home / செய்திகள் / மூத்த ஊடகவியலாளர் பெருமாள் மறைவு – வாகீசத்தின் அஞ்சலிகள்

மூத்த ஊடகவியலாளர் பெருமாள் மறைவு – வாகீசத்தின் அஞ்சலிகள்

யாழ்ப்பாணத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர்களுள் ஒருவரான பெருமாள் இயற்கை எய்தியுள்ளார்.

சிரேஸ்ர ஊடகவியலாளர் பெருமாளின் மறைவுக்கு வாகீசம் செய்திப்பிரிவின் அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்வதோடு அவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

தமிழ் ஊடகப்பரப்பில் ஒரு ஜாம்பவான் என்று அழைக்கப்பட்ட பெருமாள் ஈழநாடு பத்திரிகை ஆசிரியராக நீண்ட காலம் பணியாற்றியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் வெளிவந்த ஈழநாடு பத்திரிகையை தொடர்ந்து அது மூடப்பட்ட பின்னராக உதயன் நாளிதழில் இவரின் பங்கு முக்கியமானது.

இளம் ஊடகவியலாளர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்த அவரை யாழ். ஊடக அமையம் வாழும் போதே கௌரவித்திருந்தது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com