மூடிய அறையில் தேடிய வேர்கள் – கேரள டயறீஸ் வெளியீடு

போராளிகள் குறித்து 2012 இல் மிகவும் அருவருக்கத்தக்கவகையில் கட்டுரை எழுதியதால் அருளினியன் என்ற எழுத்தாளர் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கியிருந்தார். இந்தியாவில் வசித்துவந்த அவர் கேரள டயறி என்ற புதிய புத்தகம் ஒன்றை வெளியிடுவதற்காக கடந்தவாரம் யாழ்ப்பாணம் வருகைதந்திந்தார். முன்னர் மோசமான கட்டுரை எழுதியதற்கே மன்னிப்போ விளக்கமோ அளிக்காத அவர் புதிய புத்தம் வெளியிடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவரால் வெளியிடப்படவுள்ள கேரள டயறீஸ் புத்தகத்தில் சாதிய பிரச்சினைகளை உருவாக்கவல்ல கட்டுரைகள் உள்ளதாகவும் கூறி அவருக்கு தொடர்ச்சியாக எதிர்ப்புவெளியிடப்பட்டுவந்தது.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஊடக சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்த அவர், முன்னர் எழுதிய கட்டுரை விகடன் கூறியதால் எழுதியதாகவும் தான் நேர்காணல் செய்தவர் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவரா என்பது கூட தனக்கு தெரியாது எனவும் கூறி கட்டுரைக்காக மன்னிப்புக் கோரி விகடன் மேல் குற்றஞ்சாட்டி தான் தப்பித்துக்கொள்ள முயற்சித்திருந்தார்.

இந்நிலையில் அவரது கேரள டயறீஸ் நூல் திட்டமிட்படி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை 04 மணிக்கு வெளியிடப்படும் எனவும் அறிவிப்புச் செய்திருந்தார்.
எனினும் அவசர அவசரமாக நேற்று நண்பகல் 12.30 மணியளவில் யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றின் அறையில் மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானோரின் பங்குபற்றலுடன் கேரள டயறீஸ் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நூலை வெளியிடுவதற்கு யாழ்.இந்துக் கல்லூரி நிர்வாகம் மண்டபத்தை வழங்க மறுத்திருந்த நிலையில் நேரத்தை மாற்றி திடீர் ஏற்பாடு ஒன்றின் பேரில் விடுதியில் இந்த நூலை வெளியிட வேண்டிய நிலை நூலாசிரியர் அருளினியன் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் நேற்றைய இரகசிய வெளியீட்டின்பொதும் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் அருளியனின் நேரத்துக்கு ஒன்று பேசும் உறுதியற்ற நிலைப்பாடு மற்றும் 5 வருடங்கடந்தபின் பத்திரிகை நிறுவனத்தின் மீது பழிபோட்டுத் தப்பிழக்க முயன்றமை ஆகியன சுட்டிக்காட்டப்பட்டு உரையாற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com