முஸ்லீம் மீள் குடியேற்றத்தில் வடக்கில் பாரபட்சம் காட்டப்படவில்லை – முதலமைச்சர் அறிக்கை

வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் காணி வழங்களிலும் பாரபட்சம் காட்டப்படுவதாக வௌியான குற்றச்சாட்டு அடிப்படையற்றது என, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கில் முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் குறித்த தகவல்கள் அடங்கிய செய்திக் குறிப்பிலேயே வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திலும் காணி வழங்களிலும் பாரபட்சம் காட்டப்படுவதான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கிலிருந்து இடம்பெயர்வின்போது 21 ஆயிரத்து 668 முஸ்லீம்களே இடம்பெயர்ந்திருந்ததாகவும் எனினும் 2015 ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம்வரை வடக்கில் மீள்குடியேற்றத்திற்காக 26ஆயிரத்து841 முஸ்லீம்கள் மீள் குடியேற்றத்திற்கு விண்ணப்பித்ததாகவும் அவற்றில் 24 ஆயிரத்து 40 பேர் மீள்குடியமர்த்தப்பட்டுவிட்டதாகவும் இரண்டாயிரத்து 801 பேர் மட்டுமே இன்னமும் மீள்குடியேற்றப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ள அந்தச் செய்திக் குறிப்பில் மீள்குடியேற்றத்தின் போது வழங்கப்பட்ட 4 ஆயிரத்து 307 காணிகளில் 3 ஆயிரத்து 145 காணிகள் அதாவது 73.02 வீதமான காணிகளில் முஸ்லீம்களே மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் ஊடகப்பிரிவினரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com