சற்று முன்
Home / செய்திகள் / முஸ்லீம் நாடாக இலங்கை மாறும் – திகதி வெளியிடுவோம் என்கிறார் உதய

முஸ்லீம் நாடாக இலங்கை மாறும் – திகதி வெளியிடுவோம் என்கிறார் உதய

முஸ்லிம் நாடாக இலங்கை மாறும் தினத்தை எதிா்வரும் 23ம் திகதி பகிரங்கமாக அறிவிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினா் உதய கம்மன்பில கூறியிருக்கின்றாா்.

கொழும்பு – நுகேகொடை பகுதியில் நேற்றைய தினம் வஹாப்வாத அடிப்படைவாதத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற பெயரில் பொதுக்கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த கூடத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே உதய கம்மன்பில இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

விஞ்ஞான ரீதியில் முஸ்லிம்களின் வளர்ச்சி வீதத்தை ஆதாரங்களுடன் ஒப்பிட்டு இலங்கை முஸ்லிம் நாடாக மாறும் தினத்தை நான் அறிவிக்கவுள்ளேன்.

2021ஆம் ஆண்டிற்கான புள்ளிவிபரவியல் தரவின் படி நாட்டில் முஸ்லிம்களின் மொத்த சனத்தொகை நூற்றுக்கு 12 வீதமாக உயர்வடையும்.

அதேவேளை சிங்களவர்களின் மொத்த சனத்தொகை 75 வீதத்திலிருந்து 73 வீதமாக மாற்றமடையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com