முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்வதற்கு வடக்கு முதலமைச்சர் காணி வழங்கவேண்டும்! – அதாவுல்லா

முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்வதற்கு எத்தனை ஏக்கர் காணி தேவையோ அத்தனை ஏக்கர் காணிகளையும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வழங்கவேண்டுமென தேசிய காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான அதாவுல்லா தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் பேரவை ஒன்றை அமைக்கும் நோக்கில் நேற்று முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம் மக்களிடையே உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், வடமாகாண முதலமைச்சர் சாதாரண ஒருவரல்ல, அவர் நீதியானவர் எனக் காட்டியவர்.

நீதியரசருக்கு நாங்கள் வழிகாட்டவேண்டிய அவசியமுமில்லை. எனவே முஸ்லிம் மக்கள் குடியேறுவதற்கு எத்தனை ஏக்கர் காணி தேவையோ அத்தனை ஏக்கர் காணியையும் முதலில் அவர் வழங்கவேண்டும்.

விகிதாசாரப்படி மீள் குடியேற்றம் செய்வது தவறு எனவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com