சற்று முன்
Home / செய்திகள் / முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு

முழு அரசு மரியாதையுடன் இன்று மாலை ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்கு

15267971_1656381894388087_7765723822452108400_nடிசம்பர் 5-ஆம் தேதியன்று (திங்கள் கிழமை) காலமான தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கவுள்ளது.

டிசம்பர் 6-ஆம் தேதியன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.30 மணியளவில் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவகத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடக்கவுள்ளது என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் தெரிவித்துள்ளார்._92846158_ammademise jayalalitha-last3805

மார் இரண்டரை மாதங்கள் சென்னை கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் நாள் இரவு 11. 30 மணிக்கு காலமானார்.
பின்னர், ஜெயலலிதாவுடைய பூதவுடல் மருத்துவமனையில் இருந்து போயஸ் தோட்டத்தில் இருக்கும் அவரது வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது.
இந்நிலையில், டிசம்பர் 6-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் போயஸ் தோட்டத்திலிருந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டது.
ஜெயலலிதாவின் பூதவுடலின் மீது அதிமுக கட்சி கொடியும், அதற்கு மேலே இந்திய தேசிய மூவர்ணக் கொடியும் போர்த்தப்பட்டிருந்தது.

ஜெயலலிதா உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி அரங்கத்தில், அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கூடியுள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com