முழங்காவில் துயிலுமில்லம் புனரமைக்க 20 இலட்சம் வழங்கிய சிறிதரன்!

முழங்காவில் துயிலுமில்லத்தை புனரமைப்புச் செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் 20 இலட்சம் ரூபா வழங்கியுள்ளார்.

இந்நிதி, துயிலுமில்ல வளாகத்தின் சுற்று மதில் அமைப்பதற்காக வழங்கப்பட்டு அதனது ஆரம்ப கட்ட வேலைகள் இடம்பெறுகின்றது.

கடந்த 17ஆம் நாள் இதற்கான அத்திவாரக் கற்கள் நடப்பட்டு தற்போது கட்டும் வேலைகள் மிகவும் வேகமாக இடம்பெற்று வருகின்றது.

இதன் கட்டுமானப் பணிகள் அடுத்த மாதம் மாவீரர் நாளுக்கிடையில் நிறைவு பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com