முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் செம்மணியில் சுடரேற்றலுடன் ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் செம்மணியில் சுடரேற்றலுடன் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.
முள்ளிவாய்க்கால் படுகொலை வாரத்தின் முதலாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா காலத்தில் 600 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்ட செம்மணி மண்ணில் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாளைய நிகழ்வுகள் கிழக்கு மாகாணத்திலும், 14 ஆம் திகதி சென்பீற்றர் தேவாலயத்திலும், 15 ஆம் திகதி குமுதினி படுகொலைக்காக நெடுந்தீவிலும் 16 ஆம் திகதி 17 ஆம் திகதி வவுனியா, மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களில் நடைபெறவுள்ளன.
18 ஆம் திகதி வடக்கு கிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறும் இடம்பெறவுள்ளன.
இன்றைய நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.
நிகழ்வில் தாயகப் பகுதியில் படுகொலைசெய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூர்ந்து சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com