முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நாளை ஆரம்பம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நாளை வியாழக்கிழமை செம்மணி புதைகுழி பகுதியில் சுடரேற்றலுடன் ஆரம்பமாகவுள்ளது. அதே வேளை கிழக்கில் திருகோணமலையிலுள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவு தூபி பகுதியில் சுடரேற்றலுடன் ஆரம்பமாகவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று புதன்கிழமை ஊடக மாநாட்டில் அவர் இவ்வறிவிப்பினை விடுத்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் முள்ளிவாய்க்காலில் காலை 18ம் திகதி சுடரேற்றல் மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முதலமைச்சர் தலைமையில் முள்ளிவாய்க்காலில் நடைபெறுமெனவும் மேலும் தெரிவித்தார்.
காலை 9 மணி முதல் 10 மணிவரை முதலமைச்சர் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெறுமென தெரிவித்த அவர் நினைவேந்தல் உரையை முதலமைச்சர் ஆற்றுவாரெனவும் நிகழ்வு தொடர்பில் முழுமையான அறிவிப்பு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்படுமெனவும் தெரிவித்தார்.
மக்கள் மாலை வரை அங்கு வந்து அஞ்சலிகளை செலுத்த முடியுமென தெரிவித்த அவர் நினைவேந்தலிற்கு எவரது அனுமதியையும் பெறவேண்டிய தேவையில்லையென தெரிவித்ததுடன் மத ரீதியான நிகழ்வுகளை காலை 6 மணி முதல் 9 மணிவரை முன் முன்னெடுக்கவும் கேட்டுக்கொண்டார்.
மே 18 அன்று களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்து அனைவரையும் நினைவேந்தல்களை கிராம மட்டங்களிலும் முன்னெடுக்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com