இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்ம சாந்திக்காக முன்னாள் இந்துகலாசார அமைச்சர் அமரர் jதியாகராஜா மகேஸ்வரனின் சகோதரர் துவாரகேஸ்வரனின் ஏற்பாட்டில் முன்றாவது ஆண்டாக கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் இறைவழிபாடுகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
நாளை (18) காலை நகுலேஸ்வரர் ஆலயத்தில் காலை ஆறு மணியளவினில் உருத்திரா அபிசேகமும் மகாயாகமும் நடைபெற்று அதனை தொடர்ந்து பிதிர்கடன் வழங்கப்பட்டு தொடர்ந்து மோடச தீபம் ஏற்றும் நிகழ்வும் இடம்பெறுமென தி.துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய் கிழமை ஊடக சந்திப்பினை மேற்கொண்டிருந்த அவர் மேலும் தெரிவிக்கையில,
நாளை (18) இடம்பெறவுள்ள கொல்லப்பட்ட உறவுகளிற்கு பிதிர்கடன் செலுத்தும் இப் புண்ணிய கைங்கரிய நிகழ்வில் பங்கேற்க கட்சி பேதம் கடந்து அனைவரிற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மூன்றாவது ஆண்டாக இம்முறையும் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களிற்கான ஆத்மசாந்திக்கான வழிபாடுகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் உயிரிழந்த உறவுகள் முள்ளிவாய்க்கால் சென்று அஞ்சலி செலுத்தி திரும்ப வாகன ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.