முள்ளிவாய்க்காலில் அழிந்த வாகனங்களிற்கு இழப்பீடு தொடர்பில் அவசர கூட்டம் 13ஆம் திகதி யாழில்

936227_509686589085160_1508494275_nவன்னி இறுதி யுத்தத்தினில் அழிந்து போயுள்ள வாகனங்களிற்கான இழப்பீட்டை வழங்க காப்புறுதிநிறுவனங்கள் மறுத்துள்ளமை அம்பலமாகியுள்ளது.முழுமையாக காப்புறுதி செய்யப்பட்ட வாகனங்கள் பலவும் கூட முள்ளிவாய்க்கால் வரை சென்றிருந்த நிலையினில் உரிமையாளர்களால் இறுதியினில் அவை கைவிடப்பட்டிருந்ததுடன் அவர்களும் முற்றாக வெளியேறியிருந்தனர்.பின்னர் அவை அனைத்துமே காணாமலும் எரியுண்டு அழிந்தும் போயிருந்தன.
இந்நிலையினில் தமது வாகனங்களிற்கு காப்புறுதி நிறுவனங்கள் கொடுப்பனவுகளை செய்யவேண்டுமென வாகன உரிமையாளர்கள் நீண்ட காலமாக போராடிவருகின்ற நிலையினில் அதனை காப்புறுதி நிறுவனங்கள் மறுதலித்தே வருகின்றன.
இதையடுத்து அரசுடன் இவ்விடயம் தொடர்பாக பேச பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்கள் முற்பட்டுள்ளனர்.இது தொடர்பிலான அவசர கூட்டமொன்று எதிர்வரும் 13ம் திகதி புதன்கிழமை பிற்பகல் 4மணிக்கு நல்லூரிலுள்ள யூரோவில் மாநாட்டு மண்டபத்தினில் நடைபெறவுள்ளதாக யாழ்.முகாமையாளர் சங்க இணைப்பாளர் வி.நிரஞ்சன் அறிவித்துள்ளார்.
மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர் அலுவலக தொலைபேசியான 021-2227012 மூலமோ அல்லது கைத்தொலைபேசி இலக்கமான 0773043206 மூலமோ தொடர்புகொள்ள அவர் கோரியுமுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com